படையெடுக்கும் இசையமைப்பாளர்கள்… ஏ.ஆர். ரஹ்மான், யுவன், அனிருத்!


படையெடுக்கும் இசையமைப்பாளர்கள்… ஏ.ஆர். ரஹ்மான், யுவன், அனிருத்!

மார்கழி மாதம் வந்தாலே சங்கீதத்திற்கு குறைவிருக்காது. ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் கனமழை வெள்ளம் தமிழக மக்களை கண்ணீரில் மிதக்க வைத்தது. இதனால் தமிழகத்தின் தலைநகரே முடங்கி நின்றது.

தற்போது இதிலிருந்து திரைத்துறை உட்பட ஒவ்வொரு துறையும் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. எனவே இசையுலகில் மீண்டும் மறுமலர்ச்சி பிறந்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் உள்ளிட்டவர்கள் தங்கள் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கின்றனர்.

வருகிற ஜனவரி 16ஆம் தேதி சென்னையிலும் 23ஆம் தேதி கோவையிலும் ‘நெஞ்சே எழு’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை வெள்ளத்தால் பாதிக்கப்பப்பட்ட சென்னை வாசிகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா தன் சார்பாக இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார். ஜனவரி 23ஆம் தேதி கோவையிலும், ஜனவரி 26ஆம் தேதி மதுரையிலும் ‘வாய்ஸ் ஆஃப் யுவன்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்.

இதனையடுத்து அனிருத், அடுத்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி மலேசியாவில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். இவர் சமீபத்தில் கனடா நாட்டில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது தாங்கள் அறிந்ததே.