ஜி.வி.பிரகாஷூக்கு ஒரு ‘டார்லிங்’ பத்தாதாம், ரெண்டு வேணுமாம்.!


ஜி.வி.பிரகாஷூக்கு ஒரு ‘டார்லிங்’ பத்தாதாம், ரெண்டு வேணுமாம்.!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை விட ஹீரோ ஜி.வி.பிரகாஷ் படு பிஸியாக காணப்படுகிறார். கிட்டதட்ட அரை டஜன் படங்களில் நடித்து வரும் அவர், ராஜேஷ் இயக்கத்தில் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதில் ஒரு நாயகியாக நிக்கி கல்ராணி ஒப்பந்தமாகியிருந்தார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே ‘டார்லிங்’ படத்தில் இணைந்து நடித்தது நாம் அறிந்ததே.

இவர்களுடன் அவிகா கோர் (Avika Gor) என்ற மற்றொரு நாயகியும் நடிக்கவிருக்கிறாராம். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள இவர், இப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது லொகேஷன் தேர்வு மற்றும் இதர கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதால் அதனை முடித்துவிட்டு, விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.