அனுஷ்காவை திருமணம் செய்த நித்யா மேனன்!


அனுஷ்காவை திருமணம் செய்த நித்யா மேனன்!

‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து அனுஷ்கா நடிப்பில் உருவாகி படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் ‘ருத்ரமாதேவி’ படம் ஆந்திராவில் மட்டும் கடந்த 9ஆம் தேதி வெளியானது. இதில் அனுஷ்காவுடன் அல்லு அர்ஜூன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், சுமன், ‘மெட்ராஸ்புகழ் கேத்தரின் தெரஸா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தாலும் அனுஷ்காவை மையப்படுத்தியே படம் உருவாகியுள்ளது.

இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை குணசேகர் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் ப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வருகிற 16ஆம் தேதி தமிழில் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் கதையில் அரசர் குடும்பத்திற்கு தேவையான எல்லா பயிற்சிகளையும் கற்றவராக ஒரு ஆண் மகனை போல வளர்ந்து இருப்பாராம் அனுஷ்கா. ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் கட்டாயத்தால் அனுஷ்கா, நித்யாமேனை திருமணம் செய்து கொள்வாராம். ஆனால் அனுஷ்கா பெண் என்பதே பின்னர்தான் நித்யாமேனனுக்கு தெரிய வருமாம். அதன்பின்னர் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை என கூறப்படுகிறது.