பிரேமம் ரீமேக்கில் பாபி சிம்ஹா.. நிவின் பாலி என்ன சொன்னார்..?


பிரேமம் ரீமேக்கில் பாபி சிம்ஹா.. நிவின் பாலி என்ன சொன்னார்..?

கேரளத்து அழகு பெண்களுக்கு தமிழ் சினிமாவில் கிராக்கி ஏற்பட்டதை போல் மலையாள படங்களின் ரீமேக் உரிமைக்கும் பெரும் போட்டி நடைபெற்று வருகிறது.

‘த்ரிஷ்யம்’ ரீமேக் ஆகி இங்கும் வெற்றி பெற்றது. ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் குறிப்பிட்ட ஒரு ஹீரோவுக்காக காத்திருக்கிறது. இதனிடையில் ‘பெங்களூர் டேஸ்’ படம் ரீமேக் செய்யப்பட்டு விட்டது. இப்போது ‘பிரேமம்’ பட ரீமேக்கிற்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘பிரேமம்’ படம் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தன்னுடைய கேரக்டரில் பாபி சிம்ஹா நடித்தால் நன்றாக இருக்கும் என நிவின் பாலியே பாபி சிம்ஹாவிடம் கூறியதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது உருவாகியுள்ள ‘பெங்களூர் டேஸ்’ ரீமேக் (பெங்களூர் நாட்கள்) படத்தில் நிவின் கேரக்டரில் பாபி நடித்துள்ளதும், இவர்கள் இருவரும் ‘நேரம்’ படத்தில் இணைந்து நடித்ததும் இங்கே கவனித்தக்கது.