டீச்சரை காதலித்து மாணவியை மணந்த நிவின்பாலி!


டீச்சரை காதலித்து மாணவியை மணந்த நிவின்பாலி!

நேரம் படத்தில் நடித்த நிவின்பாலியின் சமீபத்தியி படம் பிரேமம். மலையாளத்தில் வெளியான இப்படம் கேரளாவில் சக்கை போடு போடுகிறது. மலையாளம் தெரியாத மற்ற மாநில ரசிகர்களும் இப்படத்தை ரசித்து வருகின்றனர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும், மலர் டீச்சருக்கு மாணவன் நிவின்பாலிக்கும் உண்டாகும் காதல் காட்சிமலர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த ரொமான்ஸ் நிறைந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதத்திற்கு அப்படியொரு வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் மலர் டீச்சராக நடித்திருந்த சாய்பல்லவி தற்போது கேரளாவின் கனவு கன்னியாகி விட்டாராம். இந்த டீச்சர் மாணவன் காதல் குறித்து நிவின் பாலி என்று கேட்டால்.. அவர் கூறியதாவது…

என் நிஜ வாழ்கையில் டீச்சரை காதலித்தது இல்லை. அப்படியொரு அனுபவமும் இல்லை. ஆனால் என் சகமாணவியான அந்த பர்ஸ்ட் பெஞ்ச் மாணவியை காதலித்தேன். அவளையே தற்போது என் மனைவியாக்கிவிட்டேன்” என்றார்.