டாப் ஹீரோயின்ஸ் வேண்டாம்.. ப்ரெஷ்ஷா இருக்கட்டுமே.. நிவின்பாலி முடிவு..!


டாப் ஹீரோயின்ஸ் வேண்டாம்.. ப்ரெஷ்ஷா இருக்கட்டுமே.. நிவின்பாலி முடிவு..!

ஒரு சில புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே அந்த அதிர்ஷ்டம் அமையும். அவர்கள் அறிமுகம் ஆகும் படங்களில் டாப் ஹீரோயின்ஸ் ஒப்பந்தம் ஆவார்கள்.

12B படத்தில் ஷாம் அறிமுகமான போது இவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ஜோதிகா இருவரும் நடித்தனர்.

இப்படியான ஒரு வாய்ப்பு அதிரடி ஹிட்டுக்களை கொடுத்து நிவின் பாலிக்கு அமைந்தும் அவர் முன்னணி நாயகிகளுடன் நடிக்கவில்லை. மாறாக புதுமுக நடிகைகளையே அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவரின் ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தில் மஞ்சிமா மோகனை தனக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார். இவர் சிம்புவுடன் தற்போது அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ‘பிரேமம்’ படத்திலும் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகிய நாயகிகளுடன் நடித்தார் நிவின்.

அண்மையில் வெளியான ‘ஆக்சன் ஹீரோ பிஜூ’ படத்தில் அணு இம்மானுவேல் என்பவருடன் நடித்தார்.

தற்போது உருவாகி வரும் ‘ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்’ படத்தில் ரேபா மோனிகா என்பவரும் மற்றொரு புதிய படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி என்பவரையே நாயகியாக தேர்வு செய்திருக்கிறாராம் நிவின் பாலி.