நிவின் பாலின் ஜோடியாக ‘சூறாவளி’ வரலட்சுமி..!


நிவின் பாலின் ஜோடியாக ‘சூறாவளி’ வரலட்சுமி..!

போடா போடி படத்தில் சிம்புவின் ஜோடியாக அறிமுகமானாலும் பேர் சொல்லும் படியான படங்கள் வரலட்சுமிக்கு அமையவில்லை.

பாலாவின் இயக்கத்தில் இவர் நடித்த தாரை தப்பட்டை படம் இவருக்கு தேசிய விருதை பெற்றும் தரும் என்னுமளவிற்கு அருமையான நடிப்பை கொடுத்திருந்தார்.

தான் ஏற்ற சூறாவளி கேரக்டரை பெரிதும் பேசவைத்தார்.

இந்நிலையில், தற்போது ‘ப்ரேமம்’ நாயகன் நிவின் பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இயக்குனர் மிஸ்கினின் உதவியாளர் கௌதம் இயக்கவுள்ள இப்படம் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது.