‘பாட்ஷா’ இல்ல… ‘புரூஸ் லீ’; ஜி.வி.பிரகாஷின் அவதாரம்!


‘பாட்ஷா’ இல்ல… ‘புரூஸ் லீ’; ஜி.வி.பிரகாஷின் அவதாரம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்… இனி இவரை நடிகர் ஜிவி. பிரகாஷ் என்றே அழைக்கலாம் போலிருக்கிறது. ஒரு பக்கம் பிஸியாக விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தாலும் அதை விட பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இதற்கு முன்பே உருவான ‘பென்சில்’ படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். கெனன்யா பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு முதலில் ரஜினி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பாட்ஷா’ என்கிற தலைப்பை மையப்படுத்தி ‘பாட்ஷா என்கிற ஆண்டனி’ என்று தலைப்பிட்டனர். ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் இத்தலைப்புக்கு மறுப்பு தெரிவித்ததால் தற்போது இப்படத்தின் தலைப்பை ‘புருஸ் லீ’ என்று மாற்றி வைத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷின் படத்தலைப்புகளை வித்தியாசமாக பெயரிட்டு வருகின்றனர். எனவே இதுவும் அவரது ரசிகர்களை கவரும் எனத் தெரிகிறது.