‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..!


‘இப்போ மிஸ் ஆனாலும் சீக்கிரம் அண்ணனுடன் நடிப்பேன்.’ – சிவகார்த்திகேயன்..!

குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் இந்தளவு உயர அவரது டைமிங் சென்ஸ் காமெடியே காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

அதுபோல் இவரது வெற்றிப் படங்களில் அவருக்கு பெரிதும் கைகொடுத்தவர் காமெடி நடிகர் சூரிதான் என்று சொன்னால் அதுவும் சரிதானே.

கேடி ரங்கா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களில் இவர்களின் காமெடி கூட்டணி பெரியளவில் வரவேற்பை பெற்றது.

ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்தில் சதீஷ் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியது….

“சூரி அண்ணன் மிகப்பெரிய காமெடி நடிகர். அவருக்கு தீனிபோடும் அளவுக்கு ரெமோ படத்தில் கேரக்டர் அமையவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம்தான்.

ஆனால், அடுத்து பொன்ராம் அண்ணன் இயக்கவுள்ள படத்தில் மீண்டும் சூரி அண்ணனுடன் நடிக்கிறேன்” என்றார்.