ஓ காதல் கண்மணியா? காஞ்சனாவா? எது பக்கா மாஸ்?


ஓ காதல் கண்மணியா? காஞ்சனாவா? எது பக்கா மாஸ்?

ஒவ்வொரு வெள்ளியன்றும் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கி விட்டால் தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அலைமோதும். அதுவும் பெரிய இயக்குனர் மற்றும் நட்சத்திரங்களின் படங்கள் வந்துவிட்டால் தியேட்டர் நிலவரம் சற்று கலவரமாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி மற்றும் லாரன்ஸின் காஞ்சனா 2 படங்கள் வெளியானது. இரண்டிற்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் இடம் பெற்று விட்டன.

தமிழகம் முழுவதும் முதல் நாள் வசூல் நிலவரம்  :
காஞ்சனா  – ரூ 2.5 கோடியையும் ஓ காதல் கண்மணி – ரூ 2 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

3 நாட்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் :

காஞ்சனா –  ரூ 1 கோடியே 25 லட்சத்தை வசூல் செய்துள்ளது.
ஓ காதல் கண்மணி – ரூ 95 லட்சத்தை வசூல் செய்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.