கலாச்சார அதிர்வை உண்டாக்கும் ‘ஓ காதல் கண்மணி’


கலாச்சார அதிர்வை உண்டாக்கும் ‘ஓ காதல் கண்மணி’

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர தயாராகவிருக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சந்திப்பில் இயக்குனர் மணிரத்னம், பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், நடிகை சுஹாசினி, நாயகன் துல்கர் சல்மான், ‘விஜய் டிவி’ புகழ் ரம்யா, தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ க்ரீன்’ ஞானவேல்ராஜா  உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.  ஆனால் நாயகி நித்யாமேனன் வரவில்லை.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது…

“என்னைப் போல ஒரு படைப்பாளி, கலாச்சார அதிர்வை எழுத்தில் உண்டாக்கி விடமுடியும். ஆனால், ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் கலாச்சார அதிர்வை கண்முன்னே கொண்டு வருவதற்கு பல கோடிகளை முதலீட்டில் இடவேண்டும்.

ஒரு பரிசோதனை முயற்சியாக மணிரத்னம் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்ற ஒரு நிகழ்வு இருக்குமா என்ற அச்சம் சமூகத்தில் நிலவுகிறது. உலகமயமாக்குதல் என்கிற சுனாமி அலையில் கலாச்சாரங்களும், மொழிகளும், நம் மண்ணின் பண்பாடுகளும் மெல்ல மெல்ல அதிர்வுகள் காணக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த அதிர்வின் அடிப்படையிலே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நினைத்துக்கொண்டு இப்படத்தை நீங்கள் பார்த்தால் நம் கண்களுக்கு பிரகாசம் கிடைக்குமென்றே நினைக்கிறேன்” என்றார்.