மே 1; கமலுடன் மல்லுக்கட்டும் ஸ்டார்ஸ் – ஒரு பார்வை…


மே 1; கமலுடன் மல்லுக்கட்டும் ஸ்டார்ஸ் – ஒரு பார்வை…

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘உத்தமவில்லன்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவடையாததாலும், சென்சார் பணிகள் முடிவடையாததாலும் படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிக் கொண்டே போனது.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், நாசர், மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள உத்தமவில்லனை கமலுடன் இணைந்து லிங்குசாமி தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து போஸ்டர் டிசைனை வெளியிட்டுள்ளனார். வருகிற மே 1ஆம் தேதி உழைப்பாளிகள் தினம் அன்று படம் வெளியாகவிருக்கிறது. அன்றைய தினம் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பது தாங்கள் அறிந்ததே.

இந்நிலையில், இதற்கு முன்பே மற்ற படங்களும் அன்றைய தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஒருவேளை இன்று ‘உத்தமவில்லன்’ படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம். தற்போதைய நிலவரப்படி கமலுடன் மல்லுக்கட்டும் ஸ்டார்ஸ் பற்றிய ஒரு பார்வை இதோ…

1) அருண்விஜய் மற்றும் கார்த்திகா இணைந்து நடித்துள்ள படம் ‘வா டீல்’. ஹேமன்த் இயக்கியுள்ள இப்படத்தை ரத்தினசிவா இயக்கியுள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். அண்மையில்  வா டீல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இந்திய அளவில் டிரெண்ட் ஆகியிருந்தது.

2) ’இயற்கை’,’ ஈ’, ’பேராண்மை’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் ’புறம்போக்கு’. ஆர்யா, விஜய் சேதிபதி, ஷாம், கார்த்திகா  நடித்துள்ள இப்படத்தை யுடிவி நிறுவனமும் ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸூம் இணைந்து தயாரித்துள்ளது.

3) இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘இது என்ன மாயம்’. இவர்களுடன்  நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா, காவ்யா ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு நீரவ் ஷா  ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

4) சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம். ‘இடம் பொருள் ஏவல்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.