சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜெய்!


சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜெய்!

தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய நாளாக விநாயகர் சதுர்த்தி உருவெடுத்துள்ளது. அன்றைய தினம் வெளியாகவிருந்த விஜய்யின் ‘புலி’ படம் தள்ளிப்போனதும் அதன்பின்னர் அன்றைய தினம் நிறைய படங்கள் வெளியாகவுள்ளதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எதிர்பார்ப்பு வரிசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினிமுருகன்’ படம் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவின் ‘மாயா’, ஜி.வி. பிரகாஷின் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படங்களும் வெளியாகவுள்ளது.

தற்போது இத்துடன் நான்காவது படமாக கௌதம்மேனன் தயாரித்து ஜெய் நடித்துள்ள ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ இணைந்துள்ளது. ப்ரேம்சாய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய்யுடன் யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ப்ரேம், ஸ்ரீசரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் இசையமைக்க சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எனவே விநாயகர் சதுர்த்தி ரேஸிஸ் சிவகார்த்திகேயனுடன் ஜெய்யும் இணைந்துள்ளதால் இப்பவே களை கட்டத் துவங்கியுள்ளது தமிழ் சினிமா.