ரஜினி ரசிகர்களை ஏமாற்றும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்..!


ரஜினி ரசிகர்களை ஏமாற்றும் ஷங்கர்-ஏ.ஆர்.ரஹ்மான்..!

‘முத்து’ படத்தின் மூலம் ரஜினி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணைந்தது. அன்றுமுதல் ஒரு சில படங்களைத் தவிர ரஜினியின் பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிவிட்டார்.

அதன்பின்னர் இவர்களின் கூட்டணியில் டைரக்டர் ஷங்கரும் வந்து விட்டார். இவர்களின் கூட்டணியில் உருவான சிவாஜி படம் இந்தியளவில் பெரும் சாதனை படைத்தது.

அதன்பின்னர் வெளியான எந்திரன், இந்திய சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றது.

எனவே, இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகிவரும் எந்திரன் 2 (2.0) படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரசிகர்களும் இப்படத்தின் பாடல்களை பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஆனால் இப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்தான் இடம் பெற போகிறதாம். இதனால் பாடலை பெரிதும் எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

இப்படத்தை ஹாலிவுட் பாணியில் எடுக்கவிருப்பதால் படத்தின் நேரத்தையும் குறைத்து, அதாவது இரண்டு மணி நேரம் மட்டுமே இப்படம் ஓடக்கூடும் என்கிறார்கள்.

ஆனால் படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு குறைவிருக்காது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.