என் கேரியரில் இது புதுசு – ‘ஒரு மெல்லிய கோடு’ அர்ஜூன்


என் கேரியரில் இது புதுசு – ‘ஒரு மெல்லிய கோடு’ அர்ஜூன்

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் வரும் பன்ச் டயலாக் ‘ஒரு மெல்லிய கோடு’. இதுவே தற்போது ஒரு படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டிருப்பது தாங்கள் அறிந்ததே. ‘குப்பி’, ‘வனயுத்தம்’ போன்ற படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார்.  ‘ஜெய்ஹிந்த் 2′ படத்திற்கு பிறகு அர்ஜுன் நடிக்கும் இப்படத்தை அக்ஷயா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்க மற்றும் மனிஷா கொய்ராலா , ரவிகாளே, அருள்மணி ஆகியோர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்க சேதுஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து நடிகர் அர்ஜுனிடம் கேட்டபோது…  ”ஒரு மெல்லிய கோடு’ படம் என் சினிமா கேரியரில் முக்கிய படமாக இருக்கும். ஒரு புதுமாதிரியான கதைக்களம். இன்னும் 10 வருடங்கள்  கழித்து இப்படத்தை நினைத்து பார்த்தாலும் பெருமை பட்டுக்கொள்ளலாம். அப்படிபட்ட ஒரு அருமையான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர்” என்றார் அர்ஜூன்.

அர்ஜுன் சார் நீங்க மெல்லிய கோட்டுக்கு எந்த பக்கம் சார்?