தமிழ் சினிமா: நேற்றைப் போல் இன்றும் ‘ஒரு நாள் கூத்து’


தமிழ் சினிமா: நேற்றைப் போல் இன்றும் ‘ஒரு நாள் கூத்து’

‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்ற பழமொழி தமிழில் உள்ளது. ஆனால் நேற்றைய பொழுது ‘கூத்தாடி ரெண்டு பட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்’ என்பது போல் ஆனது. நேற்று ஒட்டு மொத்த மீடியாவும் நடிகர் சங்கத் தேர்தலையே சுற்றி சுற்றி வந்தது. இரு அணியினரின் பரபரப்பான அறிக்கை, தள்ளு முள்ளு, மோதல், வெற்றி, தோல்வி என இந்த ‘ஒரு நாள் கூத்து’ நேற்று முடிவடைந்தது.

இது நேற்றோடு முடிவடையவில்லையாம். இன்றும் ஒரு நாள் கூத்து தொடர்ந்து நடைபெறவுள்ளதாம். ஆனால் இது தேர்தல் அல்ல ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவாம். இன்னும் புரியலையா? சரி விரிவாக சொல்கிறோம்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள படம்தான் ‘ஒரு நாள் கூத்து’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாதான் இன்று நடைபெறவுள்ளது.  இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், கருணாகரன், பால சரவணன், ரித்விகா, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கோகுல் ஒளிப்பதிவு செய்ய கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக செல்வகுமார் தயாரித்துள்ளார்.