தமிழ்நாட்டுல தமிழ் தோக்க முடியாது… தமிழைக் கொலைவெறி பண்ணிய தனுஷ்!


தமிழ்நாட்டுல தமிழ் தோக்க முடியாது… தமிழைக் கொலைவெறி பண்ணிய தனுஷ்!

‘வேலையில்லா பட்டதாரி’ கூட்டணி சேர்ந்து பண்ணியிருக்கிற அடுத்த படம் ‘தங்க மகன்’.

படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.இளவட்டங்களுக்கேற்ற காதல், ஆக்ஷன், குடும்பத்திற்கு ஏற்ற சென்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த கலவையாக இதன் ட்ரெய்லர் உருவாகியுள்ளது.தவிர, தனுஷ் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ள பன்ச் வசனங்கள் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது.

முக்கியமாக ‘தமிழ்நாட்டுல இங்கிலீஷ் தோக்கலாம், பிரெஞ்ச் தோக்கலாம், கொரியன் தோக்கலாம், ஜப்பானீஸ் தோக்கலாம், இட்டாலி தோக்கலாம், ஸ்பானிஷ் தோக்கலாம், ஜெர்மன் தோக்கலாம், ஆனா, தமிழ்நாட்டுல தமிழ் தோக்கவே முடியாது’ என்கிற வசனம் ரொம்பவே மக்கள் மனதை ஆழம் பார்க்கும் என்கிறார்கள்.?
தமிழ்நாட்டுல தமிழ் தோக்கவே முடியாது’ என்று இப்போது ட்ரைலர் விட்டிருக்கிற தனுஷ் கூட்டணிதான் கொஞ்சூண்டு தமிழும் மீதி ஆங்கிலமுமாக தமிழைக் கொலைவெறி பண்ணியவர்கள் என்பதை தயவு செய்து மறந்துருங்க வாசகாஸ்.