பி.சி.ஸ்ரீராம்… ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு!


பி.சி.ஸ்ரீராம்… ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக தேர்வு!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகிய தேர்தல்களை தொடர்ந்து ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்தத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. இதில் நடுநிலை அணி சார்பில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணியினரும், சேவை அணி சார்பில் ஜி.சிவா தலைமையிலான அணியினரும், ஆண்டவர் அணி சார்பில் கன்னியப்பன் தலைமையிலான அணியினரும் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள 912 நபர்களில் 704 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதில் 555 வாக்குகள் பெற்று புதிய தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரையுலகின் பல்வேறு பிரிவினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.