எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!


எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கும் விஜய்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் ஆகிய இரு பிரபலங்களின் படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார் கலைப்புலி எஸ்.தாணு. இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவை மட்டுமில்லாமல் ஒரு புதிய படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறாராம் தாணு.

இப்படத்தை புரட்சி இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கவிருக்கிறார். இவர் முதன்முறையாக நடித்த படத்தை தன் கடைசி படம் என்றார். ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற படத்தில் 70 வயது இளைஞராக (படத்தின் கதைப்படிதான்) நடித்திருந்தார். இதுதான் தன்னுடைய கடைசி படம் என அவர் கூறியிருந்தது தங்களுக்கு நினைவிருந்தால் அதை மறந்து விடுங்கள்.

ஏனென்றால், தற்போது ‘நையப்புடை’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இதில் பிரபல பாடலாசியரும் நடிகருமான பா.விஜய் நாயகனாக நடிக்கவிருக்கிறார். இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சியும் நடிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.