‘ரஜினி ரசிகர்களை நினைச்சா பயமா இருக்கு…’ ரஞ்சித் சொன்ன ரகசியம்..!


‘ரஜினி ரசிகர்களை நினைச்சா பயமா இருக்கு…’ ரஞ்சித் சொன்ன ரகசியம்..!

கடந்த மே 1ஆம் தேதி கபாலி டீசர் யுடியூபில் குறைந்த நாட்களில் 1.50 கோடி ஹிட்ஸை தாண்டி, மேலும் சாதனை படைத்து வருகிறது.

லைக்ஸ் அடிப்படையில் பார்க்கும்போது உலகளவில் முதல் ஐந்து இடத்திற்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சாதனை குறித்து படத்தின் இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது…

“இந்த டீசர் எங்கள் குழுவினர் அனைவருக்கும் பிடித்து இருந்தது. ஆனால் எனக்கு ரஜினி ரசிகர்களை நினைத்தால் பயமா இருந்தது.

அவர்களுக்கு பிடிக்குமா? அவர்களை திருப்திபடுத்த முடியுமா என்ற எண்ணமே எனக்கு பயத்தை உண்டாக்கியது. அப்போது தாணு சார்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்.

ஆனால் இப்பொழுது ரசிகர்களை கவர்ந்து சாதனை படைத்து வருகிறது. எனக்கு மிக்க மகிழ்ச்சி. எனவே படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

படத்தின் பாடல்களை மே மாத இறுதியில் வெளியிட இருக்கிறோம்” என்றார் ரஞ்சித்.