கபாலி இயக்குனரின் அடுத்த படம்… லிஸ்ட்டில் டாப் ஹீரோக்கள்..!


கபாலி இயக்குனரின் அடுத்த படம்… லிஸ்ட்டில் டாப் ஹீரோக்கள்..!

அட்டக்கத்தி என்ற ஒரே ஒரு படத்தை கொடுத்து ரசிக நெஞ்சங்களில் அட்டைப்பூச்சியாய் ஒட்டிக் கொண்டவர் இயக்குனர் ரஞ்சித்.

இவரின் முதல் படம் ஹிட்டடிக்கவே, தொடர் தோல்விகளை கொடுத்த கார்த்தி, எனக்கு ஒரு ஹிட் கொடுங்க என்று ரஞ்சித்திடம் ஒட்டிக் கொண்டார்.

இவர்கள் இணைந்த மெட்ராஸ் படம், மெட்ராஸையும் தாண்டி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எவரும் எதிர்பாரா வகையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். படத்தை இயக்குவதற்கு முன்பே இந்தியா முழுவதும் பிரபலமானார் ரஞ்சித்.

ரஜினி நடித்து முடித்துள்ள ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது பிஸியாக இருக்கிறார் ரஞ்சித்.

இதனைத் தொடர்ந்து விரைவில் அடுத்த படத்தை இயக்க ஆயுத்தமாகி விடுவார் எனத் தெரிகிறது.

இதில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்கக்கூடும் எனவும் அப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.