சிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..!


சிம்பு – நயனுக்கு காதலை சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… பாண்டிராஜ் ஓபன் டாக்..!

ஒருவழியாக பல ஆண்டுகளுக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இது நம்ம ஆளு திரைப்படம் நாளை மறுநாள் (மே 27ஆம் தேதி) ரிலீஸ் ஆகிறது.இதில் சிம்பு நயன்தாரா,ஆண்டரியா, சூரி, சந்தானம் உள்ளிட்டோர் நடிக்க குறளரசன் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து பாண்டிராஜ் கூறியதாவது…

“எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்வில் காதலை சந்தித்து இருப்பார்கள். எப்படியாவது அந்த காதல் அவர்கள் வாழ்வில் பூத்திருக்கும்.இந்த படத்தில் ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கையை பற்றி சொல்லியிருக்கிறேன்.

இதில் சிம்பு – நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே ஏற்படவில்லை.

அவர்களின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.

மேலும் சிம்பு. சூரியின் காமெடியும், ரசிகர்களின் கைத்தட்டல்களுக்கு காரணமாக அமையும்.

சிறப்பு தோற்றத்தில் சந்தானம் நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் சிரிப்பலையாய் இருக்கும்.

ஒரே படத்தில் ரசிகர்களை 100 முறையாவது சிரிக்க வைக்க நினைத்தேன். அது இப்போது நிஜமாகி உள்ளது” என்றார் பாண்டிராஜ்.