‘ஜெயிச்சதும் ஏறி அடிப்பாங்க…’ நோட்டுக்கு ஓட்டு பற்றி பாண்டிராஜ்..!


‘ஜெயிச்சதும் ஏறி அடிப்பாங்க…’ நோட்டுக்கு ஓட்டு பற்றி பாண்டிராஜ்..!

தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் இறுதியான நாளிலிருந்து பார்க்கும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம்தான்.

அதற்கு வேட்பாளர்கள் செலவு செய்த பண மழையே முக்கிய காரணமாக கூறப்பட்டது.

மேலும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் போனதற்கு பணம் பட்டுவாடாவே காரணம் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது..

“ஊருக்குள்ள எங்க பாத்தாலும் ரூ. 500 மற்றும் ரூ. 1000/- தான். மளிகை கடை, மெடிக்கல் ஷாப் எங்கும் சில்லறை கெடைக்கல! இறங்கி அடிச்சிருக்காங்க. ஜெயிச்சதும் ஏறி அடிப்பாங்க..”

என்று இன்றைய நோட்க்கு ஓட்டு போடுவது கலாச்சாரம் குறித்த உண்மைய உரக்கச் சொல்லியிருக்கிறார்.