‘பிரேமம்’ ரீமேக்.. மீண்டும் இணையும் ‘இது நம்ம ஆளு’ டீம்..!


‘பிரேமம்’ ரீமேக்.. மீண்டும் இணையும் ‘இது நம்ம ஆளு’ டீம்..!

கடந்த ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

இதில் நடித்த நிவின்பாலி, மடோனா, சாய் பல்லவி, அனுபமா ஆகியோருக்கு பெரும் அளவில் ரசிகர் பட்டாளம் உருவானது.

இதன் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன், அமைரா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தமிழில் இப்படத்தின் ரீமேக் குறித்து பல கருத்துக்கள் உலாவி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தின் புரமோஷன் பணிகளில் பாண்டிராஜ் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர்… ‘சிம்பு நடிக்க ப்ரேமம் படத்தின் ரீமேக்கை நான் இயக்க வேண்டும் என ஒரு பிரபல தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார்.

அது நடக்குமா? என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது. பார்க்கலாம்” என்று பேசினார்.

அப்போ நயன்தாரா, ஆண்ட்ரியா இருப்பாங்களா சார்..?