பார்த்திபன் சீதாவை இணைக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’


பார்த்திபன் சீதாவை இணைக்கும் ‘ஒரு மெல்லிய கோடு’

அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடிக்க ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படம் உருவாகி வருகிறது. ஏஎம்ஆர் ரமேஷ் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகி வருகிறது. இசை இளையராஜா.

இப்படத்தில் முன்னாள் கதாநாயகி சீதா முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இப்படத்தின் கதையோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறாராம் பார்த்திபன்.

எனவே 24 வருடங்களுக்கு பிறகு ‘புதிய பாதை’ ஜோடி மீண்டும் ‘ஒரு மெல்லிய கோடு’ படத்திற்காக இணையவிருக்கின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி விவாகரத்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.