சூர்யாவின் ‘பசங்க 2’ ஆடியோ வெளியீட்டு தேதி!


சூர்யாவின் ‘பசங்க 2’ ஆடியோ வெளியீட்டு தேதி!

சூர்யா நடித்து இறுதியாக வெளியான படம் ‘மாஸ்’. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் அடுத்த படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர் சூர்யா ரசிகர்கள். இந்நிலையில் விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘24’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையில் பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘பசங்க-2’ வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தை குழந்தைகளை கவரும் வகையில் எடுத்துள்ளனர். நிறைய குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால், பிந்து மாதவி, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ பட புகழ் ஆரோல் கொரல்லி இசையமைத்துள்ளார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் பாண்டிராஜின் ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 17ஆம் தேதியும் படத்தை நவம்பர் மாதமும் வெளியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.