பசுபதியுடன் ஜோடி சேர்ந்தார் ஜனனி ஐயர்!


பசுபதியுடன் ஜோடி சேர்ந்தார் ஜனனி ஐயர்!

பாலா இயக்கிய ‘அவன் இவன்’ படத்தில் விஷாலின் ஜோடியாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். அதன்பின்னர் ‘பாகன்’, ‘தெகிடி’ ஆகிய தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் பேசத் தெரிந்து இவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால், மலையாளத்தில் வாய்ப்புகள் குவியவே அங்கே அரை டஜன் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது ஜெயன்வன்னேரி எழுதி இயக்கியிருக்கும் படத்தில் பசுபதியின் ஜோடியாக நடித்துள்ளார். ‘மஞ்சள் சிவப்பு கருப்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படம் குறித்து நாயகி கூறியதாவது… “சமுதாயத்தில் பெரும்புள்ளியாக விளங்கும் ஒருவரை கொலை செய்ய ஒருவன் திட்டமிடுகிறான். அந்நேரத்தில் அந்த பெரும்புள்ளிளை சந்திக்க செல்லும் நாயகி (ஜனனி) இருவருக்கும் இடையில் மாட்டிக்கொள்கிறார். அதன்பின் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

மேலும் படத்தில் இவரது பங்களிப்பு குறித்து கேட்டபோது… “சின்ன படம், பெரிய படம் என எதையும் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. என்னுடைய கேரக்டர் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கிறேன். ‘மஞ்சள் சிவப்பு கருப்பு’  என்ற இப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்’’ என்கிறார் ஐயர் பொண்ணு ஜனனி.