விஜய் – அஜித்… யாருக்கு ஓகே சொல்வார் பவன் கல்யாண்..?


விஜய் – அஜித்… யாருக்கு ஓகே சொல்வார் பவன் கல்யாண்..?

அஜித் நடித்து இறுதியாகி வெளியாகி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விட்ட படம் ‘வேதாளம்’. ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்த இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு பலத்த போட்டி நடைபெற்று வருகிறது.

இதன் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் ஒரு புதிய தெலுங்கு படத்திற்காக ஏ.எம். ரத்னம் மற்றும் பவன் கல்யாண் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இது ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்கா? அல்லது குஷி படத்தின் இரண்டாம் பாகமா? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

‘சர்தார் கபார் சிங்’ படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண், இதன் பின்னர் எந்த படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் ‘குஷி 2′ அல்லது ‘வேதாளம்’ ரீமேக் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்து நடிப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஷி முதல் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் பவன் கல்யாண் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.