அஜித்-விஜய் படங்கள் ஓகே… பவர் காட்டும் பவன் கல்யாண்..!


அஜித்-விஜய் படங்கள் ஓகே… பவர் காட்டும் பவன் கல்யாண்..!

தமிழ் சினிமாவில் கதைக்கு பஞ்சம் ஏற்பட்டு, மலையாள, தெலுங்கு படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன.

தற்போது தெலுங்கிலும் இந்த பஞ்சம் ஏற்பட்டுள்ளது போலும். தமிழ் படங்களை குறிவைத்து தெலுங்கு திரையுலகினர் களம் இறங்கியுள்ளனர்.

தனி ஒருவன், இறுதிச்சுற்று, கத்தி ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது அஜித்தின் மாஸ் படங்கள் ரீமேக் ஆகவுள்ளன.

வீரம் மற்றும் வேதாளம் ஆகிய படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆக இருக்கின்றன. இந்த இரண்டிலும் பவன் கல்யாண் நாயகனாக நடிக்கவிருக்கிறாராம்.

மேலும் குஷி 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார் பவன் கல்யாண். இதற்கு முன்பே விஜய்யின் குஷி தெலுங்கு ரீமேக்கில் இவர் நடித்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த மூன்று படங்களையுமே தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குனர்கள் இயக்கவிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே ஹைலைட்.