சம்பள பாக்கியை அஜித்துக்கு தெரியாமல் மறைக்கும் சிவா!


சம்பள பாக்கியை அஜித்துக்கு தெரியாமல் மறைக்கும் சிவா!

இந்த வருடத்தில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட்டடித்த படங்களில் அஜித்தின் வேதாளம் படமும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் வெளியான அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசூல் சாதனை புரிந்தது.

இதனால் அஜித் ரசிகர்கள் முதல் அஜித்துடன் பணியாற்றியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

ஆனால் இப்படத்தை இயக்கிய சிவா முழுமையான மகிழ்ச்சியில் இல்லையாம். இதற்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் சம்பளம் முழுவதையும் தரவில்லை என கூறப்படுகிறது.

இதற்குள் தயாரிப்பாளர் தனது மகன் ஜோதி கிருஷ்ணா இயக்கும் ஒரு தெலுங்கு பட வேலைகளில் பிஸியாகி விட்டாராம். மேலும் சில முன்னணி நடிகர்ளின் படத்தை தயாரிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இதனால் சிவாவுக்கு நெருக்கமானவர்கள் அஜித்திடம் சம்பள பாக்கியை பற்றி தெரிவிக்கலாமே என்று கூறியுள்ளனர். ஆனால் இதனை மறுத்த சிவா, அஜித் சார் ஆப்ரேஷனை முடித்து விட்டு ஓய்வில் இருக்கிறார். அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்றாராம்.