நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..!


நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..!

எந்த சீசனுக்கும் முடிவு வந்துவிடும் போல. ஆனால் பேய் படம் சீசனுக்கு முடிவே இல்லாமல் தொடர்கதையாகி வருகிறது.

தற்போது மீண்டும் ஒரு பேய் படத்தின் பூஜை நாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெறவுள்ளது.

இதில் பாண்டிராஜன் மகன் பிருத்விராஜன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு பேய் முனை 32 எனப் பெயரிட்டுள்ளனர்.

இவருடன் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் தம்பி ராமையா, யோகி பாபு நடிக்கின்றனர்.

ஜெயலட்சுமி கம்பைன்ஸ் சார்பாக விவேகானந்த ரெட்டி தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் அஜித் சிசி.

ரமேஷ் குணா ஒளிப்பதிவு செய்ய, சாஜன் மாதவ் இசையமைக்கிறார்.

Related