‘டைரக்டருக்கு லாபம்.. எனக்குதான் நஷ்டம்…’ பென்சில் புரொடியூசர் புலம்பல்..!


‘டைரக்டருக்கு லாபம்.. எனக்குதான் நஷ்டம்…’ பென்சில் புரொடியூசர் புலம்பல்..!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்து பல படங்கள் வெளியானாலும், அவர் முதன்முதலில், நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்ட படம் ‘பென்சில்’.

இதில் ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்க, மணி நாகராஜ் இயக்கியுள்ளார்.

தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பத்தாது என இயக்குனர் போர்க்கொடி உயர்த்த, இப்படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் கிடப்பில் இருந்தது.

இதனால் படம் தொடர்பாக பல பஞ்சாயத்துக்கள் நடைபெற்றது.

எனவே தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடையே சமாதானம் செய்ய, தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இரண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இதுகுறித்து, தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‘எங்களுக்கும் இயக்குனருக்கும் நடுவில் சம்பள பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு சம்பளம் ஏழு லட்சம்தான் பேசப்பட்டது. ஆனால் படம் நன்றாக வந்துள்ளது என அதிக சம்பளம் கேட்டார்.

எனவே, பதினைந்து லட்சம் கொடுத்துவிட்டோம். தற்போது ஜி.வி. பிரகாஷின் மார்கெட் உயர்ந்துள்ளதால் அதிக சம்பளம் கேட்க, வேறு வழியில்லாமல் அதையும் கொடுத்துவிட்டோம்.

எல்லாம் நன்றாக முடிந்துவிட்டது. ஆனால், படத்தை தயாரித்த நாங்கள் மட்டும் நஷ்டமடைந்து இருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.