36 வயதினிலே படத்தை கைதியுடன் பார்த்த போலீஸ் சஸ்பென்ட்!


36 வயதினிலே படத்தை கைதியுடன் பார்த்த போலீஸ் சஸ்பென்ட்!

விழுப்புரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களை திருடும் மதன் என்பவரை இரவு 9.30 மணியளவில் போலீசார் விசாரித்து வந்தனர். 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது என்பதால் கை விலங்குடன் அவரை ஜீப்பில் ஏற்றி ரவுண்ட்ஸ் வந்துள்ளனர்.

அப்போது அருகில் இருந்த தியேட்டரில் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ படம் திரையிடப்பட்டிருந்தது. எஸ்.ஐ. அழகேசன், ஹெட் கான்ஸ்டபிள் ஞானபிரகாசம், டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் அந்த விசாரணைக் கைதி மதனுடன் சென்று படம் பார்த்துள்ளனர்.

கைவிலங்குடன் கைதி ஒருவர் தியேட்டரில் படம் பார்ப்பதை கண்ட பொதுமக்கள் வாட்ஸ் அப்பில்  உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இத்தகவல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், டி.எஸ்.பி. சீத்தாராமன் ஆகியோருக்கு சென்றுள்ளது. இதனால் அந்த மூன்று போலிஸ்காரர்களை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனர்.