‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..?


‘தெறி’ படத்திற்கும் பாலிமர் டிவிக்கும் என்னதான் பிரச்சினை..?

புலி விஜய்யின் காலை வாரி விட்டாலும், தெறி விஜய்க்கு அதிரடி மாஸாக அமைந்துள்ளது. சிட்டி முதல் பட்டி தொட்டி வரை இப்படம் தெறிக்க விட்டு வருகிறது.

இப்படத்தை வெளியிட்ட சில திரையரங்குகளில் டிக்கெட் அதிகமாக விற்கப்படுவதாக பாலிமர் டிவியில் செய்திகள் ஒளிப்பரப்பப்பட்டன. எனவே இரு தரப்பிற்கும் பிரச்சினை உருவாகியுள்ளது.

இந்நிலையில், கோவையில் அந்த தொலைக்காட்சியை சேர்ந்த நபர் என்று கூறப்பட்ட ஒரு நபர், தெறி படத்தை கேமராவில் பதிவு செய்துள்ளார். எனவே, மீண்டும் பிரச்சினை அதிகளவில் உருவாகியுள்ளது.

இதனால்தான், தெறி தயாரிப்பாளர் தாணு, பத்திரிகையாளர் சந்திப்பில் பாலிமர் தொலைக்காட்சியை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இதுஒரு புறம் இருக்க, சில நாட்களுக்கு முன்பு பாலிமர் டிவிக்கு வைகோ பேட்டியடிளித்த போது, இடையிலே பேட்டியை நிறுத்திவிட்டு எழுந்து வந்தார்.

வைகோவுடன் நல்ல நட்பாக இருக்கும் தாணு இதுபோன்ற பிரச்சினையாலும் பாலிமர் டிவியை தவிர்ப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.