கேரள ரசிகர்களுக்கு விஜய்யின் பொங்கல் விருந்து..!


கேரள ரசிகர்களுக்கு விஜய்யின் பொங்கல் விருந்து..!

சில வருடங்களுக்கு முன் ரஜினி ரசிகராக விஜய், அஜித் நடித்துக் கொண்டிருந்தனர். தற்போது அஜித், விஜய்யின் ரசிகர்களாக இன்றைய நட்சத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ராவணன், மொழி, காவியத் தலைவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்த ப்ரித்திவிராஜ் ‘பாவாட என்னும் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்யின் தீவிர ரசிகராக இவர் நடித்து வருவதை நாம் முன்னே தெரிவித்திருந்தோம்.

இப்படத்தின் பல காட்சிகளில் விஜய்யின் வெறித்தனமான ரசிகராக இவர் வருகிறாராம். மேலும் ‘துப்பாக்கி’ படத்திற்காக முதல் காட்சி டிக்கெட் எடுக்க தள்ளுமுள்ளு காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

மார்த்தாண்டன் இயக்கியுள்ள இப்படத்தில் இவருடன் மியா ஜார்ஜ், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 15ஆம் கேரளாவில் ரிலீஸ் ஆகிறது.

கேரளாவில் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால் இப்படம் கேரளா விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கூறப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு ‘போக்கிரி’ பொங்கல்… அப்போ இந்த வருஷம் ‘பாவாட’ பொங்கல்?