ஹன்சிகாவை விட்டு பூனம் பஜ்வாவுக்கு தாவிய சுந்தர் சி.!


ஹன்சிகாவை விட்டு பூனம் பஜ்வாவுக்கு தாவிய சுந்தர் சி.!

ஒரு படம் வெற்றிப்பெற்றால் அது ரீமேக் ஆவது காலம் காலமாக நடந்தேறிவது நாம் தெரிந்த ஒன்றுதான். அந்த வரிசையில் தற்போது வெள்ளிமூங்கா என்ற மலையாள படம் இணைந்துள்ளது.

ஜிபு ஜோக்கப் இயக்கியிருந்த இப்படத்தில் பிஜு மேனன், அஜு வர்கீஸ், நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது 2014ஆம் ஆண்டு வெளியானது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர் சி பெற்று இருக்கிறார். இதில் ‘அரண்மனை 2’ படத்திற்கு மீண்டும் சுந்தருடன் இணைகிறார் பூனம் பஜ்வா. சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

சுந்தர் சி தயாரித்து நடிக்க இப்படத்தை இவரது உதவியாளர் வெங்கட் இயக்கவிருக்கிறார். திருநெல்வேலியில் இதன் படப்பிடிப்பை மார்ச் இரண்டாம் வாரத்தில் தொடங்கவிருக்கின்றனர்.

கடந்த சில படங்களில் ஹன்சிகாவுக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி இதில் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.