கால் நூற்றாண்டுக்கு பிறகு இணையும் சின்னதம்பி-பெரியதம்பி..!


கால் நூற்றாண்டுக்கு பிறகு இணையும் சின்னதம்பி-பெரியதம்பி..!

சுந்தர்.சியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம் வி.ஆர். இயக்கும் புதிய படம் 7 நாட்கள்.

இதில் சக்திவேல் வாசு நாயகனாக நடிக்கிறார். இவருடன் முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.

பிரபு நடித்த சின்னத்தம்பி படத்தில் சிறுவயது பிரபுவாக நடித்தவர் சக்திவேல். அதன்பின்னர் பெரியதம்பி என்ற பெயரிடப்பட்ட படத்தில் பிரபு நடித்திருக்கிறார்.

தற்போது கிட்டதட்ட 25 வருடங்களுக்கு பிறகு பிரபுவும் சக்திவேல் வாசுவும் இணைந்து நடிக்கின்றனர்.

நாயகிகளாக நிகிஷா பட்டேல் மற்றும் அங்கனா ராய் நடிக்கின்றனர். இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்ஷினி, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முக்கிய வேடங்களில் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் நடிக்கின்றனர்.

இப்படத்தை மில்லியன் டாலர் மூவீஸ் சார்பில் கே.கார்த்திக், கே.கார்த்திகேயன் ஆகியோர் தயாரிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.