யானையுடன் மல்லுக்கட்டத் தயாராகும் பிரபு சாலமன்..!


யானையுடன் மல்லுக்கட்டத் தயாராகும் பிரபு சாலமன்..!

வெற்றி பெற்ற பழைய படங்களை திரும்ப எடுத்தால் அது ரீமேக். சமீபத்தில் வெற்றி பெற்ற படங்களை இயக்கினால் அது பார்ட் 2. தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இதுதான்.

ரஜினி, ஷங்கர் இணைந்த ‘எந்திரன்’ படம் வெற்றிப் பெறவே, தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘2.ஓ’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

சூர்யா நடிப்பில் ‘சிங்கம்’ படத்தின் இரண்டு பாகங்களை இயக்கிய ஹரி, தற்போது ‘எஸ் 3’ என்ற பெயரில் 3ஆம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து பிரபு சாலமனும் இந்த ரூட்டில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்.

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து பெரும் ஹிட்டடித்த ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகிறாராம் பிரபு சாலமன்.

இதில் அதே நடிகர்கள் நடிப்பார்களா? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘மிரட்டு’ படத்தின் ரிலீசுக்கு பிறகு ‘கும்கி 2’ படத்தின் பணிகளை தொடங்குவார் பிரபு சாலமன் என கூறப்படுகிறது.