பிரபு சாலமன், தனுஷ் இணையும் படத்திற்கு இப்படியொரு பெயரா?


பிரபு சாலமன், தனுஷ் இணையும் படத்திற்கு இப்படியொரு பெயரா?

தனுஷ் நடித்து நேற்று வெளியான தங்கமகன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மேலும் ஒரு இந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ்.

இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தில் தனுஷுடன் த்ரிஷா, ஷாம்லி, இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘கொடி’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், தனுஷை இயக்கிய பிரபு சாலமன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டாலும் இன்னும் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. ஆனால் படத்தின் கதை முழுவதும் ரயிலிலே நடைபெறுவதால் சென்னை டூ புதுடெல்லி என்ற பெயரை வைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் கதையும் ரயிலை போல சென்னையில் இருந்து புதுடெல்லி வரை பயணிப்பதால் இந்தத் தலைப்பே இறுதியாக வாய்ப்புள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.