‘மன்னன்’ ரீமேக்… விஜய் நடிப்பது குறித்து பிரபு விளக்கம்!


‘மன்னன்’ ரீமேக்… விஜய் நடிப்பது குறித்து பிரபு விளக்கம்!

அட்லி இயக்கும் தெறி படத்தை முடித்த கையோடு பரதன் இயக்கும் ‘விஜய் 60’ படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதனைத் தொடர்ந்து ‘விஜய் 61’வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கவுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

இப்படம் ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பூ நடித்து பி. வாசு இயக்கிய மன்னன் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. இளையராஜா இசையமைத்து கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை சிவாஜி பிலிம்ஸ் சார்பாக நடிகர் பிரபு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரபு கூறியதாவது… “மன்னன் படத்தை ரீமேக் செய்யும் எண்ணமில்லை. அப்படி எண்ணம் இருந்தால் நாங்களே தெரிவிப்போம் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம்’ என பிரபு கூறினார்.