‘மக்கள் மிரட்டலில் ரஜினி, விஜய் தோற்றார்கள்…’ பிரகாஷ்ராஜ்


‘மக்கள் மிரட்டலில் ரஜினி, விஜய் தோற்றார்கள்…’ பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்… ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர், வில்லன், குணச்சித்திர கேரக்டர் என ஒவ்வொன்றிலும் தனி முத்திரையை பதித்து வருபவர். தற்போது நிறைய படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஒரு பிரபல வார பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது…

‘‘நான் தற்போது ஆறு மாநில மொழி படங்களில் நடித்து வருகிறேன். இயக்குனர் பிரியதர்ஷனின் படத்தில் நடிக்க இருக்கிறேன். ‘காஞ்சிவரம்’ படத்தில் எனக்கு விருது வாங்கி கொடுத்தவர் அவர். அவரு கூப்பிட்டா மறுக்கமுடியுமா? அதுபோல் ஓ காதல் கண்மணிக்கு மணிரத்னம் கூப்பிட்டார். ‘தூங்காவனம்’ படத்திற்கு கமல் அழைத்தார்.

இவங்ககிட்ட போய் ‘எனக்கு சான்ஸ் கொடுங்க’னு கேட்க முடியாது. அவங்களுக்கே என்னை எப்பக் கூப்பிடணும்னு தெரியும்.

இடையில சொந்தமா படம் எடுக்கிறேன். 20 வருஷமா ஒரு மனுஷனை ஏன் தொடர்ந்து பார்க்கிறாங்க. அந்த நம்பிக்கைக்கு நான் துரோகம் பண்ணக் கூடாது. அதான் என்னுடைய படைப்புல தரமான படங்களை கொடுக்க நினைக்கிறேன். சிலசமயம் அது தோல்வியில முடிஞ்சிருக்கு.

ரஜினி, விஜய் படமெல்லாம் பார்க்காத தோல்வியா? படம் நல்லாயில்லைன்னா அவ்வளவுதான்னு மக்கள் மிரட்டுறாங்க.

சின்ன பட்ஜெட்டுல ஒரு படம் எடுத்திருக்கேன் பாருங்க. அப்படின்னு யாரிடமும் கெஞ்ச முடியாது. பிடிச்சா அவங்களே பார்ப்பாங்க. மக்களுக்கு பிடிக்காத படத்தை எடுத்தா வருத்தப்பட வச்சிடுவாங்க. எது வேணுமோ அதை ஜனங்கள் எடுக்கட்டும். மக்களை குறை சொல்ல முடியாது. நானே பத்து வருஷத்திற்கு முன்னாடி எப்படி இருந்தேன். இப்போ எப்படியிருக்கேன். அந்த பழைய பிரகாஷ்ராஜை வச்சிக்கிட்டு எவ்வளவு நாள் இருக்க முடியும்.

மேலும் அவர் தத்து எடுத்தும் கிராமங்கள் பற்றி கேட்டதற்கு…

இவ்வளவு நாள் நாம எடுத்துகிட்டோம். இப்போ அதை திருப்பிக் கொடுக்கிற நேரம் வந்தாச்சு. எங்க போனாலும் ஜனங்கள் என்மேல் காட்டுற அக்கறை, அன்பு, உபசரிக்கும் அழகு… இப்படி நிறைய இருக்கு. இதுக்கெல்லாம் ஏதாவது நாம திருப்பி கொடுக்கனும். ரூ. 130 ரூபாய் மட்டும் வச்சிக்கிட்டு சென்னைக்கு வந்தேன். இப்போ நிறைய கிடைச்சிருக்கு. தத்து எடுத்ததை பிச்சை போடுறேன்னு நினைச்சா அது ரொம்ப பாவம். எனக்கு கிடைத்த நன்மை எல்லோருக்கும் கிடைக்கணும் நினைக்கிறேன்.’’

இவ்வாறு பேட்டியில் கூறினார் பிரகாஷ்ராஜ்.