விபத்தில் சிக்கிய ப்ரணித்தா…. தொழிலாளர்களுக்கு நன்றி.!


விபத்தில் சிக்கிய ப்ரணித்தா…. தொழிலாளர்களுக்கு நன்றி.!

சூர்யாவுடன் மாஸ், கார்த்தியுடன் சகுனி ஆகிய படங்களில் நடித்தவர் ப்ரணித்தா.

இந்நிலையில் இவர் கம்மத்தில் நடைபெற்ற ஷோ-ரூம் திறப்பு விழாவை முடித்துவிட்டு காரில், ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த டூவிலர் இவரின் கார் மீது மோத வந்தது. அதை தவிர்ப்பதற்காக டிரைவர் காரை வளைத்த போது அது கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பிரணித்தா உள்ளிட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து ப்ரணித்தா தன் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது..

“விபத்தை சந்தித்த நாங்கள் இப்போது நன்றாக இருக்கிறோம். ஆனால் அந்த அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அப்போது சாலையோர தொழிலாளர்கள்தான் உதவினார்கள். அவர்கள்தான் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். அவர்களுக்கு என் மிகப்பெரிய நன்றி” என்று தெரிவித்துள்ளார்.