உதயநிதி படும் அவஸ்தை…? பெயரை மாற்றும் பிரசாந்த்..!


உதயநிதி படும் அவஸ்தை…? பெயரை மாற்றும் பிரசாந்த்..!

பொங்கல் விருந்தாக உதயநிதி நடித்த கெத்து திரைப்படம் வெளியானது. இப்படத்தின் பெயர் தமிழ் சொல் இல்லை என்பதால் வரிவிலக்கு இல்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

எனவே படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி வழக்கு தொடுத்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுநாள் வரை ‘சாஹசம்’ என்று பெயரிடப்பட்ட தலைப்பை மாற்றவிருக்கிறாராம் நடிகர் பிரசாந்த்.

இவர் நடித்து படங்கள் வருவதே அரிதாகி விட்ட நிலையில் நீண்ட நாட்களுக்கு ஒரு படம் வரவிருக்கிறது.

உதயநிதி போன்று நமக்கேன் பிரச்சினை என்று நினைத்தாரோ என்னவோ… தற்போது படத்தின் பெயரை ‘சாகசம் என்ற வீரச்செயல்’ என்று மாற்றி விட்டாராம்.

எல்லாம் கலைஞரின் கதை திரைக்கதையில் சில படங்களை தியாகராஜன் இயக்க பிரசாந்த் நடித்துள்ளார் என்பது கவனிக்கப்படுமோவென்ற பயம்தான்.

இதில் பிரசாந்துடன் அமண்டா, நாசர், தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அருண்ராஜ் வர்மா இயக்க சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை தியாகராஜன் தயாரித்துள்ளார்.

வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி திரையரங்குகளில் வீரச்செயல் காட்ட வருகிறார் பிரசாந்த்.