துல்கர் சல்மான் மறுத்தார்.. நிவின் பாலி ஓகே சொன்னார்…!


துல்கர் சல்மான் மறுத்தார்.. நிவின் பாலி ஓகே சொன்னார்…!

வாய்மூடி பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவை ரவுண்டு கட்டி அடிப்பார் என்று துல்கர் சல்மானை எதிர்பார்த்தனர்.

ஆனால் அண்மையில் வெளியான சார்லி படம் அவருக்கு நிறைய வாய்ப்புகளை மலையாளத்தில் கொடுத்துள்ளதாம்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஓர் அறிமுக இயக்குநர் துல்கரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். ஸாரி.. நான் இவ்விட கொரச்சு பிஸியானு அப்படின்னு சொல்லி இயக்குனரை திருப்பி அனுப்பிட்டாராம் துல்கர்.

இவர் இப்படி ஒதுங்கிக் கொள்ள, நம் பிரேமம் ஹீரோ நிவின்பாலி என்ன செய்தார் தெரியுமா? ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

ராஜீவ் மேனனின் உதவியாளர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

எல்லாம் தமிழகத்தில் பிரேமம் செய்த மாயம்தான்… வெல்கம் சேட்டா…!