நாங்களும் ரசிகர்களும் சோம்பேறிகள்தான்… ‘பிரேமம்’ கலைஞர் பதிலடி..!


நாங்களும் ரசிகர்களும் சோம்பேறிகள்தான்… ‘பிரேமம்’ கலைஞர் பதிலடி..!

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் பிரேமம். தமிழகத்திலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேரள அரசின் விருது பட்டியலில் இப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை.

இதன் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை ஒரு வித சோம்பேறித்தனத்துடன் இயக்கியுள்ளார்.

எனவேதான் ‘பிரேமம்’ ஒரு விருதுக்கு கூட தேர்வு பெறவில்லை என்று விருது குழுவின் தலைவர் மோகன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்படத்தில் பணியாற்றிய சவுண்ட் இஞ்சினியர் விஷ்ணு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது…

“எங்கள் இயக்குனர் நம்பர் 1 சோம்பேறி. நாங்கள் ‘பிரேமம்’ படத்தை சோம்பேறித்தனமாகத் தான் படம் எடுத்திருந்தோம். ரசிகர்களும் ரொம்ப சோம்பேறித்தனமாக அப்படத்தை 250 நாட்கள் ஓட வைத்துவிட்டனர்.

இப்படத்தை சென்சாருக்கு அனுப்பியபோதே படத்தின் காப்பி இணையத்தில் லீக்காகி விட்டது. அப்படியிருந்தும் படம் பெரிய வெற்றிப் பெற்று விட்டது. மக்கள் ரசிக்கும் இதுமாதிரியான சோம்பேறித்தனத்தை நாங்கள் மேலும் மேலும் தொடர்ந்து செய்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.