‘சிங்கம்’ சூர்யாவுக்கு கிடைத்தது…. ‘மோகினி’ த்ரிஷாவுக்கு கிடைக்குமா..?


‘சிங்கம்’ சூர்யாவுக்கு கிடைத்தது…. ‘மோகினி’ த்ரிஷாவுக்கு கிடைக்குமா..?

சமீபகாலமாக ஒரு படத்தையே தாங்கி நிற்கும் கேரக்டர்களை துணிச்சலுடன் ஏற்று நடித்து வருகிறார் த்ரிஷா.

நாயகி என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வரும் இவர், மீண்டும் அதுபோன்ற கதையில் நடிக்கவுள்ளார்.

மோகினி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மாதேஷ் இயக்குகிறார்.

ஹாரி பாட்டர் படத்தில் பணியாற்றிய குழு இதன் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் என்ற இருவர்கள் இசையமைக்கவுள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தியா மற்றும் தாய்லாந்து, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தை தயாரித்த ப்ரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

சிங்கம் போல் இந்த மோகினி வெற்றி வாகை சூடுவாரா என்பதை பார்ப்போம்..!