ஆர்யா, ராணாவைத் தொடர்ந்து பிருத்விராஜ்! அஜித்தின் அடுத்த மூவ்!


ஆர்யா, ராணாவைத் தொடர்ந்து பிருத்விராஜ்! அஜித்தின் அடுத்த மூவ்!

வேதாளம் படத்தை தொடர்ந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இடையில் விபத்து காரணமாக அறுவை சிகிக்சை மேற்கொண்ட இவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

சில மாதங்கள் ஓய்வைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் தெலுங்கு நடிகர் ப்ரித்விராஜ் நடிக்க இருக்கிறார். இதை பிருத்விராஜே தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக அஜித் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மங்காத்தா படத்தில் அர்ஜுன், ஆரம்பம் படத்தில் ஆர்யா, ராணா உள்ளிட்டோர் அஜித்துடன் நடித்திருந்தனர். தற்போது பிருத்விராஜ். இவர் மூலம் தெலுங்கிலும் தன் மார்க்கெட்டை கொண்டுவரும் திட்டத்துடன் இந்த மூவ்க்கு க்ரீன் சிக்னல் அடித்திருக்கிறார் அஜித்.