விஜய்-அஜித்தை முந்தி, ரஜினி வழியில் பிருத்விராஜ்..!


விஜய்-அஜித்தை முந்தி, ரஜினி வழியில் பிருத்விராஜ்..!

இன்று தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் விஜய், அஜித் இருவரும் நடிக்க வந்து, கிட்டதட்ட 25 ஆண்டுகளை கடந்துவிட்டனர்.

தற்போதுவரை விஜய் 60 படங்களிலும் அஜித் 57 படங்களில் மட்டுமே நடித்துள்ளனர்.

ஆனால் நடிக்க வந்து 15 ஆண்டுகளிலேயே 100வது படத்தை தொடவிருக்கிறார் மலையாள நடிகர் பிருத்விராஜ்.

பெரும்பாலும் நடிகர்கள், தங்கள் 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாகவும் அத சமயம் கமர்ஷியலாகவும் கொடுக்க நினைப்பார்கள்.

ஆனால் பிருத்விராஜோ தனது 100வது படம் ஒரு புராணப்படமாக இருக்கவேண்டும் என விரும்புகிறாராம்.

எனவே, ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கர்ணன்படத்தை தன் 100வது படமாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

ஒரு ஆக்ஷன் மாஸ் ஹீரோவாக வலம் வந்த ரஜினி, புராணப்படமான ‘ஸ்ரீ ராகவேந்திரா‘ படத்தை தன் 100வது படமாக கொடுத்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.