இயக்குனர் ராம்-ப்ரியாமணி ஜோடிக்கு வில்லனாகும் மிஷ்கின்!


இயக்குனர் ராம்-ப்ரியாமணி ஜோடிக்கு வில்லனாகும் மிஷ்கின்!

‘கற்றது தமிழ்’ என்ற தரமான படத்தில் இயக்குனராக அறிமுகமாகி ‘தங்க மீன்கள்’ படத்தில் ஒரு பாசமிக்க தந்தையாக வாழ்ந்தவர் ராம். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிக்க ‘தரமணி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது தங்க மீன்கள் படத்தை தொடர்த்து மீண்டும் அரிதாரம் பூசவிருக்கிறார்.

இந்நிலையில், ‘பிசாசு’ படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் சரத்குமார் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். விரைவில் தொடங்க இருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இதற்கிடையில் தன்னிடம் உதவியாளராக பணிபுரிந்த ஜி.ஆர்.ஆதித்யா இயக்கும் புதிய படத்தை தயாரிக்க இருக்கிறார் மிஷ்கின்.

பெயரிடப்படாத இப்படத்தில் நாயகியாக ப்ரியாமணி நடிக்க வில்லனாக மிஷ்கின் நடிக்க நாயகனாக நடிக்கிறாராம் இயக்குனர் ராம்.

தமிழில் இரட்டையராக நடித்த ‘சாருலதா’ படத்திற்கு பிறகு ப்ரியாமணி நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.