சிவா மீது லிங்கு, லிங்கு மீது சூர்யா கோபம்- ரிலீஸில் நடக்கும் விரிசல்


சிவா மீது லிங்கு, லிங்கு மீது சூர்யா கோபம்- ரிலீஸில் நடக்கும் விரிசல்

வெங்கட் பிரபு இயக்கிய ‘மாசு என்கிற மாசிலாமணி’ படம் எப்படியெல்லாம் தூசு ஆனது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். என்னடா நம்ம தம்பிக்கும் சரியான ‘பிரியாணி’ கொடுக்கல.. நமக்கும் இப்படி ஆப்பு வச்சிட்டாரே அப்படின்னு சூர்யா புலம்பாத நாள் இல்லையாம்.

சரி அதையே நினைச்சிட்டு இருந்தா சரி வருமா அடுத்த படத்தை பார்ப்போம்னு முடிவு பண்ணிட்டு இப்போ சூர்யா தன்னோட ‘பசங்க 2’ படத்தை ரிலீஸ் செய்யப்போறார். இது டிசம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகுது.

இதே நாள்லதான் நம்ம சிவகார்த்திகேயனோட ‘ரஜினிமுருகன்’ ரிலீஸ் ஆகுதாம். இது அவருக்கே தெரியுமா தெரியலை. ஏனா லிங்குசாமி சிவாகிட்ட இன்னொரு கால்ஷீட் கேட்டாராம். ஆனால் சிவா கொடுக்க முடியாது சொன்னதால லிங்கு கோவத்துல இருக்காராம்.

இந்த படங்களோட பாபி சிம்ஹா நடித்துள்ள ‘உறுமீன்’ படம் வெளியாகவுள்ளது. இந்த படத்துல நடிக்கும்போதுதான் ரேஷ்மி மேனனுக்கும் பாபிக்கும் செம லவ்வாகி நிச்சயதார்த்தம் வரைக்கும் போனது.

இதே டிசம்பர் 4ஆம் தேதியில் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படமும் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் தினேஷ், ‘ஆடுகளம்’ முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இது வெனிஸ் திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது.